498A பொய்க்கேசு போட்டு சூறையாடிய பின் வாழ்க்கையைத் தொலைத்த பெண்கள்

அண்மையில் கோவையில் நடந்த இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டத்தைப் பற்றிய செய்திக் குறிப்பில் தினகரன் நாளிதழ் "தம்பதிகள் ஒற்றுமைக்கு விழிப்புணர்வு இயக்கம்" என்று தலைப்பிட்டிருந்தது.

இதைக்கண்ணுற்ற மூன்று பெண்மணிகள் இந்த அமைப்பின் முன்னணி உறுப்பினர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கோரினார்கள்.

அவர்கள் மூவருமே தங்கள் கணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் மீது 498A உட்பட என்னென்ன பொய்க் கேசுகள் போட முடியுமோ அவையெல்லாவற்றையும் வஞ்சனையில்லாமல் போட்டு, கைது செய்வித்து "உள்ளே தள்ளி", அதன்பின் கறக்க இயன்ற வரையில் பணத்தைக் கறந்தபின் விவாகரத்து பெற்றவர்கள். சட்டங்களின் ஓரவஞ்சனைத் தன்மையையும் தீர்ப்புகளின் ஒரு சார்பு மனப்பான்மையையும் கைக்கொண்டு தன் குழந்தைகளின் காப்புரிமையையும் கண்வன்மார்களிடமிருந்து பறித்து முழுதும் தனதாக்கிக் கொண்டவர்கள். அதில் இருவர் பெரிய தொகையொன்றை தத்தம் கண்வனிடமிருந்து பெற்றவர்கள். ஒருவர் மாதாமாதம் ஜீவனாம்சம் பெற்று வருபவர்.

சரி, அவர்களுடைய கோரிக்கைதான் என்ன?

மீண்டும் தங்கள் கணவன்மார்களிடம் சேர்த்து வாழ வைக்க வேண்டுமாம்! இது எப்படி இருக்கு!

காரணம்?

மூவருக்குமே வயது முப்பதுகளில். குழந்தைகள் வேறு. இளமை முறுக்கும் தோற்றமும் பறிபோய் விட்டன.

கல்யாணச் சந்தையில் விலை போகவில்லை. இவர்களது பொய் வழக்கு புராணம் தெரிந்தபின் எந்த மாங்காய் மடையன் இவர்களைச் சீந்துவான்!

மறுபடியும் அதே முட்டாள் கணவர்களைப் பீடித்து பேயாட்டலாம் என்று கனவு காண்கிறார்கள், அது நடக்கவே நடக்காது என்று தெரிந்தும்!

சமீபத்தில் நாங்கள் கூர்ந்து நோக்கிய பல 498A கேசுகளில் பொய்க் கேசு போட்ட பெண்குலத்திலகங்கள் வழக்கு நடக்கும்போதே வக்கீல்களிடமும், கோர்ட்டு வராண்டாக்களிலும் அலைந்து ஓரிரு ஆண்டுகளில் பத்து வயது கூடிய தோற்றம் பெற்று விடுகிறார்கள்.

சட்டங்கள் பொய் வழக்கு போட தங்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்ற நிலையைக் கைக்கொண்டு கண்வன் மற்றும் மாமியார், மாமனார், நாத்தனார் போன்றோரை எடுத்த எடுப்பில் கைது செய்வித்து ஆட்டம் காட்டலாம் என்ற வெறியில் காவல் நிலையத்திற்கும் கோர்ட்டுக்கும் படியேறுகிறார்கள். அடுத்து வக்கீல் காண்பிக்கும் இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டு பெரிய துகை ஒன்றை கணவனிடமிருந்து கறக்கிறார்கள். குழந்தைகளையும் தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று நீதிபதிகள் முன் கண்ணீர் சிந்தி தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெறுகிறார்கள்.

எல்லாம் ஆயிற்று. பிறகு?

பிறகு..??

2 மறுமொழிகள்:

')) said...

//மூவருக்குமே வயது முப்பதுகளில். குழந்தைகள் வேறு. இளமை முறுக்கும் தோற்றமும் பறிபோய் விட்டன.

கல்யாணச் சந்தையில் விலை போகவில்லை. இவர்களது பொய் வழக்கு புராணம் தெரிந்தபின் எந்த மாங்காய் மடையன் இவர்களைச் சீந்துவான்!

மறுபடியும் அதே முட்டாள் கணவர்களைப் பீடித்து பேயாட்டலாம் என்று கனவு காண்கிறார்கள், அது நடக்கவே நடக்காது என்று தெரிந்தும்!//

என்னக் கொடுமை சார் இது...

ஆபாச வக்கிர குற்றச்சாட்டுக்களை புணைந்து எனது தாய்,தம்பி, மற்றும் திருமணத்திற்ககு வந்த அப்பாவித்தாய் ஆகியோரை சிறையில் அடைத்து இப்பொழுது தூது விடுகிறார் இமெயில் முலியமாக... குழந்தைக்காக இந்த குடும்ப குத்து விளக்குடன் சேர்ந்து வாழ வேண்டும்மாம்...

இது போல் மனித தன்மையே இல்லாத ஹிட்லர் கூட்டம் என்று திருந்தும்... இவர்கள் ஆடிய ஆட்டத்திற்ககு பலன் ஒரு 40 வயது கழித்து, இளமை இழந்து பொய்கேசு போடும் பொழுது போலிஸ் ஸ்டெசன் வந்து ஆடிய பெற்றோர் உறவினர் கூட்டம் எல்லாம் கைவிட்டப்பிறகு நோந்து சாகும் இது போல் கேடு கெட்ட ஜென்மங்கள்...

உயிர் பிரியும் நிலைவந்தாலூம் இதுபோல் மிருகங்களுடன் இணைந்து வாழக்கூடாது...

போராடிப் போராடி. 498ஏ சட்டத்தை தவறாகப்பயன் படுத்தும்மனித உருவில் இருக்கும் மிருகங்களை விரட்டி அடிப்போம்...

தமிழ். சரவணன்

')) said...

பல பொய்யான FIR காப்பிகளை படித்து விட்டு இந்த தகவலை படித்தால் மனதுக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. இன்னும் இது போன்ற பல செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த அடிமாடுகளுக்கு எத்தனை அடிபட்டாலும் புத்தி வராது. காசுக்காக எவனோ அல்லது எவளோ பொய் புகார் எழுதிக்கொடுத்தால் அதில் கையெழுத்துப் போட்டு கொக்கறிக்கும்போது இந்த புத்தி எங்கே போனது?