சினேகாவின் பொய்யால் அப்பாவிக்கு தர்ம அடி

திருச்சியில் மனைவியுடன் நகை வாங்க வந்த ஒரு ஆணை அவர் தன் இடுப்பைக கிள்ளியதாக பொய் சொல்லி சுட்டிக் காட்டினார் நடிகை சினேகா. நடிகை சொன்னால் போதாதா! உடனே அந்தக் கடைச் சிப்பந்திகள் அந்த ஆள்மீது கண்டபடி தர்ம அடி போட்டனர்.

Sharmila இது பற்றி அந்த நபரின் மனைவி ஷர்மிளா கோட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும், கணவரை கண்மூடித்தனமாக தாக்கிய கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கடை ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமாரின் மனைவி ஷர்மிளா கூறுகையில்,

நானும், என் கணவர் சுரேஷ்குமாரும் தீபாவளி பர்ச்சேசுக்காக சின்னக்கடைவீதி சென்றோம். அப்போது, நடிகை சினேகா பங்கேற்ற நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தோம்.

திடீரென, "புளூ கலர் சட்டை போட்டவர், என் இடுப்பைக் கிள்ளினார்" என, சினேகா கூறியதாகத் தெரிகிறது. விழா நடந்த இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் என்னுடன் நின்றிருந்த என் கணவர் சுரேஷ்குமாரை, கடை ஊழியர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில், என் கணவர் சட்டை கிழந்தது. "தவறு ஏதும் செய்யாத என் கணவரை அடிக்காதீர்கள்" என நான் அழுதும், கடை ஊழியர்கள் தொடர்ந்து தாக்கினர்.

"இதைப் பார்த்து ஏன் அடிக்கிறீர்கள்?' என கேட்ட போலீசையும், கடை ஊழியர்கள் தள்ளி விட்டனர். என் கணவர் மீது பொய்யான புகார் கூறிய நடிகை சினேகா, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளேன்.

நடிகை சினேகா செல்லுமிடங்களில் எல்லாம் பப்ளிசிட்டிக்காக இதுபோன்று நடந்து கொள்கிறார், என்றார்.

இது பற்றி தினமலர் வெளியுட்டுள்ள செய்தியின் முந்தைய பகுதி இது:-

நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்த விவகாரத்தில் பரபரப்பான லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி சின்னக்கடைவீதியில் உள்ள நகைக்கடையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நடிகை சினேகா திருச்சி சென்றிருந்தார். நகைக்கடை விழாவில் கலந்து கொண்ட சினேகாவை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் நகைக் கடை முன் திரண்டிருந்தார்கள். விழா முடிந்ததும் கடை மேடையிலிருந்து, நடிகை சினேகா கீழே இறங்கினார். அப்போது, கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென சினேகாவின் இடுப்பை கிள்ளினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சினேகா, கடை உரிமையாளரிடம், இடுப்பை கிள்ளிய நபரை அடையாளம் காட்டி, கிளம்பிச் சென்றார். இதையடுத்து அங்கிருந்து தப்ப முயன்ற அந்த வாலிபரை கடை ஊழியர்கள் தர்ம அடி கொடுத்து கடைக்கு இழுத்து வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், "வாலிபரை எதற்கு அடிக்கிறீர்கள்?' எனக் கேட்டனர். ஆனால் கடை ஊழியர்கள் போலீசாருக்கு பதிலளிக்காமல், போலீசாரை ஒருமையில் திட்டி, வாலிபரை இழுத்துச் சென்றனர். பின்னர் வெளியே வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அவர், திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த சுரேஷ்குமார் (34) என்பதும், சினேகாவின் இடுப்பை கிள்ளிய விவரமும் தெரிந்தது.

இதையடுத்து சுரேஷ்குமாரையும், தங்களை ஒருமையில் திட்டிய பாதுகாப்பு பணியாளர்களையும் போலீசார் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் கடை உரிமையாளர்கள் சமாதானப்படுத்தியதால் (அது எந்தவித "சமாதானமாக இருக்கும் என்பதை நீங்கள் சுலபமாக யூகித்துக் கொள்ளலாம்!) அவர்களை விட்டு விட்டு போலீசார் சென்று விட்டனர்.

இதே செய்தியை தினத்தந்தி சிறிது நடுநிலையாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

திருச்சி, செப்.25- 2009

திருச்சியில் நடிகை சினேகாவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை அடித்து உதைத்த நகைகடை காவலாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் உள்ள ஒரு நகைகடையில் நேற்று நடந்த விழாவில் பிரபல நடிகை சினேகா கலந்து கொண்டார். நடிகை சினேகா நகைக்கடைக்கு வந்தபோது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக முன்னோக்கி சென்றனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அப்போது நெரிசலில் அங்கிருந்த ஒரு வாலிபர் சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா இதுபற்றி அங்கிருந்த காவலாளிகளிடம் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை நீலநிற சட்டை போட்டவர் என்று அடையாளம் காட்டியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து நீலநிற சட்டை அணிந்திருந்த ஒரு வாலிபரை கண்டுபிடித்த காவலாளிகள் அவரை இழுத்து சென்று அடித்து உதைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபர் தாக்கப்படுவதை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கடை காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்பு தாக்கப்பட்ட வாலிபரையும், கடை காவலாளிகள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி காவேரி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) என்றும், அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.

இந்த நிலையில் சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

நான் எனது கணவருடன் 24-9-2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை தாக்கியதாக நகைக்கடை காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா நிருபர்களிடம் கூறியதாவது:-

இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு. என் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சினேகா மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன்.
==============================

சினிமா நடிகைகளுக்கு ஏன் இவ்வளவு மவுசு! அவர்கள் தளுக்கி, மினுக்கி, இல்லாததை இருப்பதாக பொய்த் தோற்றங்களைக் காட்டினால்தான் அவர்களின் பிழைப்பு ஓடும். அவர்களில் பலர் மேக்கப் இல்லாமல் பார்த்தால் பயங்கரமாக இருப்பார்கள்.

அது தவிர, ஒரு பெண் "ஐயோ, என்னைக் கிள்கிறானே", "என் மேல் இடித்து விட்டானே" அல்லது "என்னைக் கையைப் பிடித்து இழுத்து விட்டானே" என்று பொது இடங்களில் கூச்சல் போட்டால் போதும், உடனே வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள் நம் ஜொள்ளு கேசுகள். என்ன ஏது என்று விசாரிக்காமல் தர்ம அடி கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஏன் தான் இப்படி அலைகிறார்களோ!

[படம்: நன்றி - தினத்தந்தி]

4 மறுமொழிகள்:

')) said...

படிப்பினை:

சினிமா நடிகைகள் நடமாடும் இடங்களுக்குச் செல்லாதீர்கள்.

டேஞ்சர்!

')) said...

தட்ஸ்தமிழ் வெளியிட்டுள்ள செய்தி:-

சினேகாவைப் பார்க்கப் போய் தேவையில்லாமல் அடி வாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர்

திருச்சிக்கு வந்த நடிகை சினேகாவை பார்க்க தனது மனைவி விரும்பியதால், சாலையோரம் வண்டியை நிறுத்தி சினேகாவைப் பார்க்கப் போய், சினேகா கலந்து கொண்ட நகைக் கடை பாதுகாவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர்.

திருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகை கடையின் 2 -ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் நடிகை சினேகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

சினோகாவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குழுமியிருந்தனர். அப்போது, அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் முண்டியடித்தது.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகை சினேகா கடையின் நிறுவன அதிபரிடம் புகார் செய்தார். நீல நிற சட்டை போட்டிருந்த ஒருவர் தனது இடுப்பைக் கிள்ளியதாக கூறியுள்ளார் சினேகா.

இதனையடுத்து, கடை காவலாளிகள் கும்பலில் உள்ள நீல நிற சட்டை அணிந்த நபரை தேடி அடித்து உதைத்தனர்.

அப்போது அங்கு, பாதுகாப்புக்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவராமனும், மற்றும் போலீசார் அந்த வாலிபரை அடிப்பதை தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி அந்த நபருக்கு அடி உதை விழுந்தது. இதனையடுத்து, சினேகா அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றார்.

இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய கடைக் காவலாளிகள் மூன்று பேரையும், அடிபட்டவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நடத்திய விசாரணையில் அடிபட்ட நபர் பெயர் சுரேஷ் குமார் என்பதும், திருச்சி காவேரி நகரைச் சேர்ந்தவர் என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து சுரேஷ்குமாருடன் வந்திருந்த அவரது மனைவி சர்மிளா காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில், நான் எனது கணவருடன் 24-9-2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார்.

நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்ஸ என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சர்மிளா குமுறலுடன் கூறுகையில்,

இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு. என் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சினேகா மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன் என்றார் ஆவேசமாக.

நடிகையை வேடிக்கைப் பார்க்கப் போய் தேவையில்லாமல் அடி வாங்கிய சுரேஷ்குமாரால் திருச்சி யில் பரபரப்பு ஏற்பட்டது

Anonymous said...

sneha poi sonnar endru eppadi kandupiditheergal? periya detective o>

')) said...

//அப்போது அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், "வாலிபரை எதற்கு அடிக்கிறீர்கள்?' எனக் கேட்டனர். ஆனால் கடை ஊழியர்கள் போலீசாருக்கு பதிலளிக்காமல், போலீசாரை ஒருமையில் திட்டி, வாலிபரை இழுத்துச் சென்றனர். பின்னர் வெளியே வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர்.//

இடுப்பை கிள்ளியது போலிசாக கூட இருக்கலாம். ஏனென்றால் அரசாங்கம் கொடுத்த சீருடையில் இருந்து கொண்டு தங்கள் கண்ணெதிரே ஒரு நபரை (அவர் குற்றம் செய்தவரா அல்லது குற்றமற்றவரா என்பதை போலிசோ, நீதிமன்றமோ தான் முடிவு செய்ய வேண்டும்) ஒரு கூட்டம் தாக்கும் போது வேடிக்கை பார்த்து விட்டு, அந்தக் கூட்டம் திட்டும்போதும் வாயைப் பொத்திக்கொண்டு இருந்து விட்டு பாதிக்கப்பட்ட நபர் வெளியே வந்த பிறகு விசாரித்திருக்கின்றனர். பிறகு என்ன @#~*@# க்கு யூனிபார்ம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்? பொய் கேசுகளில் சிக்கும் வயதான பெண்களிடமும், குழந்தைகளிடமும், அப்பாவி ஆண்களிடமும் தான் வீரத்தைக் காட்ட முடியும்.